18 கோடிப் பேர் கண்டு ரசித்த மகளிர் உலகக்கோப்பை
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை உலகம் முழுவதும் 18 கோடிப் பேர் தொலைக்காட்சியில் கண்டு ரசித்துள்ளனர். இது, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியை கண்டு ரசித்தவர்கள் எண்ணிக்கையை விட 300 சதவீதம் கூடுதலாகும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்து.
இதில் இந்திய-இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதிப்போட்டியை மட்டும் 12 கோடியே 60 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்சன், மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது என்றும் ரிச்சர்ட்சன் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.