
2022-ஆம் ஆண்டு நடைபெற இருந்த மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் 2023-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள ஐசிசி தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னே "மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்படுவதை சரியான முடிவாக கருதுகிறேன். இந்தப் போட்டியை ஒத்திவைப்பதன் மூலம் வீராங்கனைகளுக்கு முறையான ஓய்வும் கிடைக்கும். இது மிகப்பெரிய போட்டி என்பதால் ஒவ்வொரு நாடும் போட்டிக்கு தயாராக போதிய நேரமும் கிடைக்கும்" என்றார்.
மேலும் "கொரோனா பாதிப்பு எல்லாம் முடிவடைந்து 2022 ஆம் ஆண்டு நடைபெற்றால் எத்தகைய உற்சாகம் இருக்குமோ அதே உற்சாகத்துடன் 2023 இல் இந்தப் போட்டி தொடர் நடைபெறும். மகளிர் கிரிக்கெட்டை உத்வேகப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் அத்தனை முயற்சிகளையும் ஐசிசி தொடர்ந்து செய்யும்" என்றார் மனு சாவ்னே.