\
மகளிர் உலகக்கோப்பைக் கிரிக்கெட்: நாளை முதல் அரையிறுதிப் போட்டி

மகளிர் உலகக்கோப்பைக் கிரிக்கெட்: நாளை முதல் அரையிறுதிப் போட்டி

மகளிர் உலகக்கோப்பைக் கிரிக்கெட்: நாளை முதல் அரையிறுதிப் போட்டி
Published on: 

மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடுகின்றன.

வெலிங்டனில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது. லீக் சுற்றில் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணி அரையிறுதியை எட்டியது. மேற்கிந்திய தீவுகள் அணி, 3 வெற்றிகளுடன் லீக் சுற்றில் நான்காவது இடம் பிடித்தது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் எலிஸ் பெரி, அரையிறுதியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் பிளெட்சர் கொரோனா தொற்று காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com