மகளிர் உலகக்கோப்பை கிரிக்., இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி?

மகளிர் உலகக்கோப்பை கிரிக்., இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி?

மகளிர் உலகக்கோப்பை கிரிக்., இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி?
Published on

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகள் இடையிலான போட்டி இங்கிலாந்தின் டர்பி நகரில் நாளை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இதுவரை 42 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 8 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. நாளை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான வெற்றி வாய்ப்பு உள்ளது என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com