மகளிர் முத்தரப்பு டி20 தொடர்: சொதப்பிய இந்தியா... கோப்பையை தட்டிச்சென்ற தென்னாப்பிரிக்கா!

மகளிர் முத்தரப்பு டி20 தொடர்: சொதப்பிய இந்தியா... கோப்பையை தட்டிச்சென்ற தென்னாப்பிரிக்கா!
மகளிர் முத்தரப்பு டி20 தொடர்: சொதப்பிய இந்தியா... கோப்பையை தட்டிச்சென்ற தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்பு மகளிர் டி20 தொடரில் இந்திய அணியை வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா கோப்பையைத் தட்டிச் சென்றது.

தென்னாப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் 20 ஓவர் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி, இன்று ஈஸ்ட் லண்டனில் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

அதன்படி, களமிறங்கிய தொடக்க பேட்டர்களான ஸ்மிருதி மந்தனா டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க பேட்டர் ஜெமினா 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய டியோல் 56 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேற, மறுபுறம் கேப்டன் ஹர்மன்ப்ரீத் 21 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீப்தி சர்மா 16 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா மகளிர் அணி தரப்பில் மிலபா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணியிலும் தொடக்க பேட்டர்களில் ஒருவரான லாலுரா டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க பேட்டரான பிரிட்ஸ் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அந்த அணியில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும் சொலே டிரியன் அரைசதம் அடித்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அவர், 32 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்தார். மற்றொரு பேட்டரான நாதினி 17 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி மகளிர் தரப்பில் ரானா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com