உலகக் கோப்பையில் கூட்டு முயற்சியால் சாதித்தது மகளிர் அணி - ஜூலன் கோஸ்வாமி
அணி வீராங்கனைகளின் கூட்டு முயற்சியே மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேற காரணம் என்று ஜூலன் கோஸ்வாமி கூறினார்.
அணி வீராங்கனைகளின் கூட்டுமுயற்சியே மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறுவதற்கு காரணம் என அனுபவ வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பங்களிப்பும் சிறப்பாக இருந்ததால் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியதாக ஜூலன் கோஸ்வாமி சுட்டிகாட்டியுள்ளார்.
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், உலக்கோப்பையில் இந்திய மகளிர் அணியின் சிறப்பான ஆட்டம், அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளதாக கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டை வரவேற்க புதிய வாசல் கதவு திறந்திருப்பதை போன்று தாம் உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். இறுதியாட்டத்தில், கடைசி கட்டத்தில் நிலவிய பதற்றம் காரணமாகவே இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் மிதாலி ராஜ் குறிப்பிட்டுள்ளார்.