மகளிர் டி20: அரையிறுதியிலும் வெற்றியை தொடருமா இந்தியா..? இன்று பலப்பரீட்சை

மகளிர் டி20: அரையிறுதியிலும் வெற்றியை தொடருமா இந்தியா..? இன்று பலப்பரீட்சை
மகளிர் டி20: அரையிறுதியிலும் வெற்றியை தொடருமா இந்தியா..? இன்று பலப்பரீட்சை

மகளிர் இருபது ஓ‌வர் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. சிட்னி நகரில், இப்போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

இருபது ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா களமிறங்குகிறது. குரூப் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற அணி என்ற சிறப்போடு அரையிறுதியில் அடியெடுத்து வைக்கிறது இந்தியா.

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மாதான். அஞ்சாத அதிரடி ஆட்டத்தால் எதிரணியினரை மிரட்டும் இவர், சிறந்த ஃபார்மை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறார். ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணிக்கு பக்க பலமாக விளங்குகிறார். இங்கிலாந்து அணியின் பலமான பேட்டிங்கை ஆட்டம் காண செய்வதற்கு, துருப்புச்சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ். இத்தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரைத் தவிர ராதா யாதவ், வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே உள்ளிட்டோரும் பந்துவீச்சில் கைகொடுத்து வருகின்றனர்.

குரூப் சுற்றில் பலமான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தி அசத்தியிருந்தது. எனினும், இந்திய அணியின் முழு ஆட்டத்திறன் வெளிப்படவில்லை என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. காரணம், இத்தொடரில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவூர் மற்றும் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனலாம். மத்திய வரிசை பேட்ஸ்வுமன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருவதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அரையிறுதிப் போட்டி நடைபெறும் சிட்னி நகரில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழையால் போட்டி கைவிடப்பட்டால், குரூப் சுற்றில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறும். இருபது ஓவர் உலக்கோப்பைகளில், இதுவரை இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா தோல்வியே தழுவி இருக்கிறது. இதற்கு இப்போட்டியை வென்று தக்க ‌பதிலடியை இந்திய அணி கொடுக்க வேண்டுமென்பதே ரசிகர்களின் எண்ணமாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com