நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக ஷெஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும் என்ற நிலையில் இந்தியா உள்ளது. தற்போது 6 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்று போட்டிகளை வென்றுள்ளது. அதன் மூலம் 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறும். முதல் இரண்டு இடங்களை ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா பிடித்து அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இப்போது கடைசி இரண்டு இடங்களுக்குதான் போட்டி.
இந்த ஆட்டத்தில் 13 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 78 ரன்களை எடுத்துள்ளது.