மகளிர் கிரிக்கெட் தரவரிசை... ஆறாவது இடத்துக்கு முன்னேறிய ஹர்மன்ப்ரீத்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சர்வதேச தரநிலைப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
13-வது இடத்தில் இருந்த ஹர்மன்பிரீத் கவுர் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, தரநிலையில் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேனிங் முதலிடத்திலும், இந்திய அணிக் கேப்டன் மிதாலி ராஜ் இரண்டாவது இடத்திலும் தொடர்கின்றனர். அதேபோல மற்ற இந்திய வீராங்கனைகளான பூனம் ராவத் 5 இடங்கள் முன்னேறி 14ஆவது இடமும், வேதா கிருஷ்ணமூர்த்தி 7 இடங்கள் முன்னேறி 26ஆவது இடமும் பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் மரிசேன் கேப் முதலிடத்தில் இருக்கும் இந்த பட்டியலில் மற்ற இந்திய வீராங்கனைகளான ஷிகா பாண்டே ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 12ஆவது இடமும், பூனம் பாண்டே ஆறு இடங்கள் முன்னேறி 28ஆவது இடமும் பிடித்துள்ளனர்.