விளையாட்டு
மகளிர் கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
கொழும்புவில் நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய ஏக்தா பிஸ்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 23-வது ஓவரிலேயே இந்திய அணி எட்டியது.