உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி

உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி

உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி
Published on

லண்டனில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மகளிருக்கான உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றையப் போட்டியில் உலகத் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 17ஆவது இடத்தில் உள்ள இத்தாலி அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 9ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் பதிவு செய்து முன்னிலை பெற்றது. 45 ஆவது நிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, நேகா கோயல் இந்திய அணிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். 

போட்டி முடிய 5 நிமிடங்கள் இருந்தபோது, வந்தனா கட்டாரியா கோல் அடித்து அசத்தினார். பதில் கோல் அடிக்க இத்தாலி வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிக்கு இறுதிவரை பலன்கிடைக்கவில்லை. முடிவில் மூன்றுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் காலிறுதியில் அயர்லாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com