விளையாட்டு
மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் - டி.எஸ்.பி.பதவி வழங்கிய அரசு
மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் - டி.எஸ்.பி.பதவி வழங்கிய அரசு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவுக்கு, ஹிமாச்சலப்பிரதேச அரசு டி.எஸ்.பி. பதவி மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதனைத்தொடர்ந்து, இறுதி போட்டியில் இந்திய அணி, அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவுக்கு, ஹிமாச்சலப்பிரதேச அரசு, 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் டி.எஸ்.பி. பதவி வழங்கி கௌரவித்துள்ளது. பணிக்கான ஆணையையும், 5 லட்சத்திற்கான காசோலையையும் அம்மாநில முதலமைச்சர் வீர்பத்ரசிங் இன்று வழங்கி அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.