\
ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள்: மும்பை Vs ஐதரபாத், பெங்களூரு Vs டெல்லி

ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள்: மும்பை Vs ஐதரபாத், பெங்களூரு Vs டெல்லி

ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள்: மும்பை Vs ஐதரபாத், பெங்களூரு Vs டெல்லி
Published on
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடையவுள்ள நிலையில், கடைசி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கே தொடங்குகின்றன. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் மும்பை, ஐதரபாத் அணிகள் மோதவுள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் மும்பை 9 முறையும், ஐதராபாத் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத் அணி தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில், மும்பை அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெறும் வாய்ப்பு மிக மிகக் கடினமான கட்டத்தில் உள்ளது.
துபாயில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பெங்களூரு 16 முறையும், டெல்லி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. டெல்லி முதலிடத்துடன் குவாலிபயர் ஒன்றுக்கு தகுதி பெற்று விட்டது. பெங்களூர் அணி இந்தப் போட்டியில் பிரமாண்ட வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com