ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ்

ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ்
ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ்,  டெல்லி கேபிட்டல்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளன.

15-வது ஐபிஎல் தொடர் வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், 5 முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த ஆண்டுக்கான புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளது.

இதேபோல, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் நீலம் மற்றும் சிவப்பு வண்ணத்திலான புதிய சீருடையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து ஐபிஎல் போட்டிகளும் மும்பை மற்றும் புனே நகர்களில் நடைபெறுகின்றன.

இதையும் படிக்க: ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு - விராட் கோலியின் ரியாக்‌ஷன் என்ன? - வெளியான வீடியோ

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com