'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி

'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி
'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி

மும்பையில் நடைபெற்ற இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா பட்டம் வென்று அசத்தினார். இதனையடுத்து அவருக்கு செஸ் உலகின் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரக்ஞானந்தா புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார் அதில் " இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியின் மூலம் என் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் என்னை பாராட்டி இருப்பது, அடுத்து வரும் தொடர்களில் சிறப்பாக செயல்பட என்னை ஊக்குவிக்கும். செஸ் சர்வதேச தர புள்ளிகளை அதிகரிப்பதே எனது இப்போதைய நோக்கம்" என கூறியுள்ளார்.

முன்னதாக பிரக்ஞானந்தாவை ட்விட்டரில் பாராட்டிய விஸ்வநாதன் ஆனந்த் " வாழ்த்துகள், மிகவும் பெருமையாக இருக்கிறது. நாம் அடுத்த முறை சென்னையில் சந்திக்கும்போது சிறந்த ஆட்டத்தை என்னிடம் நீ காட்டுவாய் என நம்புகிறேன்" என தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com