விளையாட்டு
குளிர்கால ஒலிம்பிக்: ரஷ்ய வீரர்களுக்கான சீருடை அறிமுகம்
குளிர்கால ஒலிம்பிக்: ரஷ்ய வீரர்களுக்கான சீருடை அறிமுகம்
தென்கொரியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ரஷ்ய அணிக்கான சீருடை வெளியிடப்பட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஊக்கமருந்து முறைகேடு விவகாரம் காரணமாக குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி அளிப்பதா அல்லது தடைவிதிப்பதா என்பது பற்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அடுத்த வாரம் முடிவு அறிவிக்கவுள்ளது. இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிக்கான சீருடையை ரஷ்ய அணி வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் நடந்த விழாவில் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் புதிய சீருடையுடன் அணிவகுத்து வந்தனர்.