லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றில், கில்லஸ் முல்லரிடம், ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 7வது நாளான நேற்று, நான்காவது சுற்றில் கில்லஸ் முல்லருடன் நடால் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு செட்களை முல்லர் கைப்பற்றினார். அடுத்தடுத்த செட்களில் கடுமையாக போராடிய நடால், மூன்று மற்றும் நான்காவது செட்களை கைப்பற்றினார். இதனால், ஐந்தாவது சுற்றில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், முல்லர் 6-3, 6-4, 3-6, 4-6, 15-13 செட் கணக்குகளில் ரபேல் நடாலை தோற்கடித்தார்.