6-வது முறையாக பட்டம் வெல்வாரா வீனஸ் வில்லியம்ஸ்?

6-வது முறையாக பட்டம் வெல்வாரா வீனஸ் வில்லியம்ஸ்?

6-வது முறையாக பட்டம் வெல்வாரா வீனஸ் வில்லியம்ஸ்?
Published on

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ்-யும், ஸ்பெயினின் முகுருசா-வும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

லண்டனில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. விம்பிள்டனில் ஆறாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் வீனஸ் களமிறங்குகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட முகுருசா, முதல் முறையாக சாம்பியனாகும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். முகுருசா உடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களில், வீனஸ் வில்லியம்ஸ் மூன்றில் வெற்றி பெற்றுள்ளார்.

வாகை சூடும் வீராங்கனைக்கு ரூ.18½ கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும். எவ்வாறாயினும் இன்றைய இறுதிப் போட்டி டென்னிஸ் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com