அட! வட போச்சே...! : ஐபிஎல் ரசிகர்களின் ஆதங்கம்

அட! வட போச்சே...! : ஐபிஎல் ரசிகர்களின் ஆதங்கம்

அட! வட போச்சே...! : ஐபிஎல் ரசிகர்களின் ஆதங்கம்
Published on

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னருக்குப் பதிலாக புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மூத்த வீரர்களின் ஆலோசனைப்படி தான் பந்தை சேதபடுதியதாக  பேன்கிராஃப்ட் ஒப்புகொண்டார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடையும் விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடவும் தடைவிதிக்கபடுவதாக ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார்.

 இதனால் ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னருக்கு பதிலாக ஷிகர் தவான் தான் நியமிக்கப்படுவார் என்று பல தரப்பினரும் சொல்லி வந்தனர். அப்படி தவான் நியமிக்கபட்டு இருந்தால் ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து கேப்டன்களும் இந்தியர்கள் என சிறப்பு பெற முடியும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தான் இன்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன், வில்லியம்சன் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த வருடமும் அனைத்து கேப்டன்களும் இந்தியர்கள் என்ற ரசிகர்களின் கனவு தகர்ந்துள்ளது. இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ஸ்மித்துக்குப் பதிலாக, ரஹானே கேப்டன் பொறுப்பு வழங்கபட்டது குறிப்பிடதக்கது.


  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com