இந்த இந்திய வீரர்கள் கோப்பையோடு வருவார்களா?- இந்திய வீரர்களின் பலம்-பலவீனம் முழு அலசல்

இந்த இந்திய வீரர்கள் கோப்பையோடு வருவார்களா?- இந்திய வீரர்களின் பலம்-பலவீனம் முழு அலசல்
இந்த இந்திய வீரர்கள் கோப்பையோடு வருவார்களா?- இந்திய வீரர்களின் பலம்-பலவீனம் முழு அலசல்

பொதுவாகவே இந்திய அணி இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் கொண்ட கலவை அணியாக இருந்தபோதுதான் உலகக்கோப்பைகளை வென்று ருசித்திருக்கிறது. இந்த இந்திய அணியா வெல்லப் போகிறது என்ற பெரிய அலட்சிய பார்வை இருந்தபோதுதான் உலகக்கோப்பையை வென்று அனைவரையும் வியப்பிற்குள் ஆழ்த்தியது. அப்படி மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கலவையாக காணப்படும் இந்த இந்திய அணி கோப்பையை வென்று வருமா என்பதையும், இந்திய வீரர்களின் பலம் பலவீனம் குறித்த பார்வையையும் ஒரு முழு அலசலாக பார்ப்போம்.

2007 உலகக் கோப்பை அணிக்கும் இந்த இந்திய அணிக்கும் பெரிய ஒற்றுமை இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. மகேந்திர சிங் தோனி முதன்முதலில் கேப்டன் பொறுப்பை ஏற்றபோதுதான் முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. அதேபோல் தற்போதும் ரோகித் சர்மா முதன்முறையாக டி20 உலகக் கோப்பை அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அதிக அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களுடனே 2007 இந்திய அணி களமிறங்கியது. அந்த வகையில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு பெரிய வாய்ப்பாகவே அமைந்திருக்கிறது. மேலும் டி20யில் சதமடித்த 4 வீரர்கள் இந்திய அணியில் இருப்பது பெரிய பலமாக இருக்கிறது.

ரோகித் சர்மா ( கேப்டன் ):

                                                 பலம்

* டி20 களில் அதிக சதம் அடித்த ஒரே வீரர்- 4 சதங்கள் * டி20களில் அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்- 3,737 ரன்கள்
* டி20 களில் அதிக சிக்சர் அடித்த முதல் வீரர்- 178 சிக்சர்கள்
* குறைவான பந்துகளில் 100 ரன்கள் அடித்த வீரர் - 35 பந்துகளில்
* சிறந்த புல் ஷாட் வீரர்
* வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சிறந்த ஸ்டிரைக் கொண்டுள்ளார்.

                                             பலவீனம்

* புட் ஒர்க் இல்லாமல், கால்களை நகர்த்தாமல் வெளியே செல்லும் பந்துகளை ஆடுவது
* இடது கை வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சொதப்புவது
* இன்-ஸ்விங் வேகப்பந்துவீச்சில் சுலபமாக விக்கெட்டை பறிகொடுப்பது
* லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக குறைவான ஸ்டிரைக் ரேட்

கே.எல். ராகுல்

                                            பலம்

* டி20களில் 2 சதங்கள் அடித்த வீரர்
* வெளிநாட்டு மண்ணில் டி20யில் 100 ரன்கள் அடித்த வீரர்-இங்கிலாந்தில்
* பந்துவீச்சின் சிறந்த டைமர் பேட்ஸ்மேன்
* ரிஸ்ட் ஒர்க் எனப்படும், கைகளின் மணிக்கட்டை பயன்படுத்தி சிறப்பாக ஆடக்கூடியவர்
* பந்துகளை வரவிட்டு லேட் கட் சாட்கள் ஆடுவதில் வல்லவர்
* லெக் சைடு ஸ்டிராங்கான பேட்டர்

                                         பலவீனம்

* தொடக்கத்தில் நிலைத்து ஆட தடுமாறுவது
* அதிவேகமான பவுன்சர்களில் விக்கெட்டை விடுவது
* இன்-ஸ்விங் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுப்பது
* 145+ வேகமான பந்துகளில் தடுமாற்றம்

விராட் கோலி:

                                             பலம்

*டி20 உலகக் கோப்பையில் 2 முறை தொடர் நாயகன் விருது வாங்கிய ஒரே வீரர்
* டி20 களில் ஒரு சதம் அடித்த வீரர்
* மேட்ச் வின்னர் பிளேயர்- இலக்குகளை துரத்துவதில் சிறப்பாக ஆடுவது
* கடைசிவரை நிலைத்து நின்று ஆடி வெற்றியை தேடித்தருபவர்
* கவர் டிரைவ், ஃபிலிக் ஷாட் ஆடுவதில் வல்லவர்
* விக்கெட்டுகளுக்கு இடையே சிறந்த ரன்னர் - சிறந்த பீல்டர்
* கடைசி 10 டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்

                                          பலவீனம்

* ஆஃப் ஸ்டம்புகளுக்கு வெளியே வீசப்படும் வேகப்பந்துவீச்சில் எளிதாக விக்கெட்டை விடுவது
* லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆடுவதில் தடுமாற்றம்

சூரியகுமார் யாதவ்:

                                              பலம்

* கிரிக்கெட்டின் வாழ்நாள் பார்மில் இருக்கும் வீரர்
*சிறப்பான டி20 போட்டிகளில் குறைந்த பந்தில் 1000 ரன்கள்
* டி20 களில் ஒரு சதம் அடித்த வீரர்-மேட்ச் வின்னர் பிளேயர்
* டி20யில் 1 வருடத்தில் அதிக(50) சிக்சர்கள்
* சிறந்த ரிஸ்ட் ஒர்க் வீரர்- அனைத்து பக்கமும் ஆடக்கூடியவர்
* ஒரு பந்துக்கு 2 அல்லது 3 ஷாட்கள் வைத்திருப்பவர்
* ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடுவது

                                         பலவீனம்

* அடிக்க முயன்று அவுட் ஆவது மட்டுமே சமீபத்தில் அவரிடம் உள்ள குறையாக இருக்கிறது

ரிஷப் பண்ட்:

                                               பலம்

* எதிரணியின் கையில் இருக்கும் போட்டியை மாற்றும் விதமாக அதிரடியாக ஆடக்கூடியவர்
* வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சிறந்த ஸ்டிரைக்
* ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் சிறப்பாக ஆடக்கூடியவர் * மேட்ச் வின்னர் பிளேயர்

                                            பலவீனம்

* அதிரடியாக ஆடி விக்கெட்டை கொடுப்பது
* அடிப்பதை முன்கூட்டியே தீர்மானித்து விட்டு, அதிக செக் ஷாட் ஆடுவது

தினேஷ் கார்த்திக்:

                                      பலம்

* சமீப காலத்தில் சிறந்த பினிசராக உருவெடுத்துள்ளார்
* அனுபவமிக்க வீரர்-2007ல் டி20 உலகக் கோப்பை ஓபனர்
* சிறந்த கிரிக்கெட்டிங் ஷாட் ஆடுவது
* கடைசி 4 ஓவர்களில் 180-200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடும் வீரர்

                                   பலவீனம்

* ஆட்டத்தை தொடங்குவதில் தடுமாற்றம்
* ரிவர்ஸ் ஷாட்டுகள் ஆடி அவுட் ஆவது

தீபக் ஹூடா:

                                         பலம்

* அதிகம் எதிர்பார்ப்பில்லாத வீரராக தெரிகிறார், ஆனால் சமீபத்தில் சிறப்பான பார்மில் இருக்ககூடிய வீரர்
* விக்கெட்டுகள் சரியும்போது சிறந்த ஹெங்கிங் ரோல் பிளே
* தட்டி ஆடவும், அதிரடியாகவும் ஆடக்கூடிய வீரர்
* நிலைமைக்கு தகுந்தவாறு ஆட்ட அணுகுமுறை
* வேகப்பந்துவீச்சு , சுழற்பந்து என இரண்டிற்கும் எதிராக சிறந்த ஸ்டிரைக் ரேட்

                                      பலவீனம்

* அடிக்க சென்று அவுட் ஆவது மட்டுமே தற்போதைய குறையாக இருக்கிறது

ஹர்திக் பாண்டியா:

                                      பலம்

* சிறந்த ஆல்ரவுண்டர் - சிறந்த பினிசர்
* அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் ஆடக்கூடிய வீரர்
* வேகப்பந்துவீச்சு, சுழற்பந்து என இரண்டையும் அடித்து ஆடக்கூடிய வீரர்
* லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறந்த ஸ்டிரைக் ரேட் உள்ள ஒரே இந்திய வீரர்
* அதிக ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்த வீரர்
* போட்டியை மாற்றக்கூடிய வீரர்

                                  பலவீனம்

* புல் ஷாட் ஆடுவதில் தடுமாற்றம்
* ஷார்ட் பந்துவீச்சில் அவுட் ஆவது

அக்சர் பட்டேல்:

                                       பலம்

* ஹேண்ட்லி பவுலர் மற்றும் பேட்டர்
* வேகமாக ஆர்ம் பால் வீசுவதில் வல்லவர்
* ஆர்ம் பால் பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகள்
* நல்ல பீல்டர் - தேவையான நேரத்தில் அடிக்கக்கூடியவர்

                                   பலவீனம்

* புல் டாஸ் பந்துகளில் விக்கெட்டை விடுவது
* அதிக வேரியேசன் இல்லாத பவுலர்
* அதிக ரன்கள் கொடுக்கக்கூடிய பவுலர்

ஆர் அஸ்வின்:

                                         பலம்

* உயரம் அதிகமாக இருப்பது சிறப்பாக பந்துவீசுவதற்கு சாதகம்
* அதிக வேரியேசன்கள் கொண்ட ஸ்பின்னர்
* இடது கை பேட்டர்களுக்கு எதிராக சிறந்த ஸ்டிரைக் பவுலர்
* இறுதியில் சிக்சர்கள் அடிக்கக்கூடிய டெய்ல் எண்டர்

                                     பலவீனம்

* அதிக ரன்களை விட்டுகொடுக்க கூடிய வீரர்
* பிட்னஸ் பிரச்னை

யுஸ்வேந்திர சாஹல்:

                                        பலம்

* நல்ல ஸ்டிரைக் லெக் ஸ்பின்னர்
* முக்கியமான தருணங்களில் விக்கெட் எடுக்கக்கூடிய பவுலர்
* ஆட்டத்தை மாற்றக்கூடிய பவுலர்
* அதிகமாக கூக்ளி பந்துகள் வீசக்கூடியவர்
* கூக்ளி பந்துகளில் அதிக விக்கெட்டுகள்

                                    பலவீனம்

* இடது கை பேட்டர்களுக்கு எதிராக அதிக ரன்கள் விட்டு கொடுப்பது

புவனேஷ்வர் குமார்:

                                    பலம்

* பவர்பிளே ஓவர்களில் இன்ஸ்விங்- அவுட்ஸ்விங் வீசக்கூடியவர்
* நிறைய வேரியேசன்கள் உள்ள பவுலர்
* விரைவாக விக்கெட்டை வீழ்த்துவது
* இறுதியில் 10-15 ரன்கள் அடித்துத்தர கூடிய டெய்ல் எண்டர்

                                 பலவீனம்

* மோசமான டெத் ஓவர்கள் எகானமி
* கடந்த பல போட்டிகளில் டெத் ஓவர்களில் டிபண்ட் செய்ய தவறியது

ஹர்சல் பட்டேல்:

                                              பலம்

* டெத் ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடியவர்
* ஆஸ்திரேலியா போன்ற பெரிய ஆடுகளங்கள் இவரது பந்துவீச்சு அணுகுமுறைக்கு சாதகம்
* வேகம் குறைவான பந்துகளில் வேரியேசன் வைத்திருப்பவர்
* மெதுவான பந்துகளில் அதிக விக்கெட்டுகள்
* இறுதியில் 10-15 ரன்கள் பெற்றுத்தர கூடிய டெய்ல் எண்டர்

                                          பலவீனம்

* மோசமான எகானமி ரேட்
* காயமடைக்கூடிய வீரர்

அர்ஸ்தீப் சிங்:

                                          பலம்

* டெத் ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடியவர்
* ஒரு ஓவரில் அதிக யார்க்கர் பந்துகள் வீசும் வீரர்
* சிறந்த டெத் ஓவர் எகானமி
* ஆஃப் கட்டர், லெக் கட்டர் பந்துகள் அதிகமாக பயன்படுத்துவது

                                       பலவீனம்

* யார்க்கர் வீச சென்று அதிகமாக புல் டாஸ் வீசுவது
* அனுபவம் இல்லாத வீரர்

முகமது ஷமி:

                                        பலம்

* இந்திய அணியில் இருக்கும் சிறந்த சீம் பவுலர்
* தொடர்ச்சியாக 140+ வேகம் போடக்கூடிய ஒரே பவுலர்
* இன்ஸ்விங்- அவுட்ஸ்விங் இரண்டும் வீசக்கூடியவர்
* டி20யில் ஹாட்ரிக் எடுத்த வீரர்
* அனுபவமுள்ள வீரர்

                                    பலவீனம்

* அதிகமாக ரன்கள் விட்டுகொடுப்பது

ஆஸ்திரேலியா ஆடுகளங்களை ஒத்த இங்கிலாந்து ஆடுகளங்களில் டி20 சதமடித்த வீரர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் என இருப்பதும், விராட் கோலி நல்ல பார்மில் இருப்பதும், டி20 ஐசிசி தரவரிசை பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கும் சூரியகுமார் இருப்பதும், பினிசர்களாக தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா என இரண்டு சிறந்த பினிசர்கள் இருப்பதும், அனுபவமுள்ள மற்றும் இளம் வீரர்கள் பவுலர்களாக இருப்பதும் இந்திய அணிக்கு மொத்த பலமாக இருக்கிறது.

ஆனால் இடது கை பேட்டர்கள் அணியில் இல்லாதது பெரிய பாதகமாக இருக்கிறது. இடது கை பேட்டர்கள் இல்லாமல் சென்றால் லெக் ஸ்பின்னர்கள் இந்திய வீரர்களை டாமினேட் செய்வார்கள், அப்போது இந்தியாவின் ரன் ரேட் பெரிதும் பாதிக்கப்பட உள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அணிக்குள் வைக்கப்பட்டால் இந்திய பந்துவீச்சாளர்கள் முழு பொறுப்போடும் செயல்பட வேண்டும்.

சூப்பர் 12 சுற்று போட்டிகளில் இந்தியா 4-1 அல்லது 5-0 என்ற கணக்கில் போட்டிகளை வென்று அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. அரையிறுதி போட்டிகளில் போட்டியின் அழுத்த சூழ்நிலையை இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்டர்கள் எவ்வாறு சமாளித்து ஆடப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com