ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? குஜராத்திற்கு எதிராக டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்!

ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? குஜராத்திற்கு எதிராக டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்!
ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? குஜராத்திற்கு எதிராக டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்!

ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் களமிறங்கும் சென்னை அணி, அசுர பலம் வாய்ந்த குஜராத் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியை தழுவியது. அதோடு சென்னையின் பிளே-ஆஃப் கனவும் முற்றிலும் தகர்ந்து போனது.

எனவே சென்னை அணிக்கு இனிமேல் இழக்க எதுவுமில்லை என்பதால் எஞ்சிய இரு லீக் ஆட்டங்களிலும் நெருக்கடியின்றி விளையாட முயற்சிக்கும். அடுத்த ஐபிஎல் சீசனுக்கு அணியை பலப்படுத்தும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இழந்த ஃபார்மை மீட்டெடுக்க சிஎஸ்கே வீரர்கள் முயல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

மறுபுறம் அறிமுக அணியான குஜராத், நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தியிருக்கிறது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணியும் நெருக்கடியின்றி அதிரடியை தொடர முனைப்பு காட்டும். குஜராத் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஷுப்மான் கில் (384 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (344 ரன்கள்), டேவிட் மில்லர் (332 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் அமர்க்களப்படுத்துகின்றனர். முகமது ஷமி (16 விக்கெட்டுகள்), ரஷித் கான் (15 விக்கெட்டுகள்) பந்துவீச்சில் மிரட்டுகின்றனர்.

இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கெனவே மோதிய ஆட்டத்தில் குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க சிஎஸ்கே வரிந்து கட்டும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்! சென்னை அணியில் இன்று உத்தப்பா, ராயுடு, பிராவோவிற்கு பதிலாக என ஜெகதீசன், பிரஷாந்த் சோலங்கி, சான்ட்னர், மதீஷா பத்திரனா ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, சிவம் துபே, என் ஜெகதீசன், எம்எஸ் தோனி , மிட்செல் சான்ட்னர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பத்திரனா, முகேஷ் சவுத்ரி.

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா , சுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், முகமது ஷமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com