`எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ ஹர்திக் தலைமையில், இன்று நியூசி-ஐ ஒயிட்வாஷ் செய்யுமா இளம் இந்திய அணி?

`எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ ஹர்திக் தலைமையில், இன்று நியூசி-ஐ ஒயிட்வாஷ் செய்யுமா இளம் இந்திய அணி?
`எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ ஹர்திக் தலைமையில், இன்று நியூசி-ஐ ஒயிட்வாஷ் செய்யுமா இளம் இந்திய அணி?

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டி20 போட்டி இன்று பகல் 12மணிக்கு நியூசிலாந்து-நேப்பியரில் நடைபெறவிருக்கிறது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. நடந்து வரும் டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி, தொடர்ந்து நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் பங்குபெற்று விளையாட உள்ளது.

ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சைக்கு பிறகான ஒரு வருடம், எந்த போட்டியிலும் பங்குபெறாமல் இருந்தார் ஹர்திக் பாண்டியா. மீண்டும் வந்தாலும் அவரால் பந்துவீச முடியாத நிலையே இருந்தது. பேட்டிங்கில் சில போட்டிகளில் சோபித்தும், சோபிக்காமலும் இருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய அணியில் மட்டுமில்லாமல், ஐபிஎல்-ன் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இப்படி பல நேரஞ்களில் வெளியேற்றப்பட்டார் ஹர்திக் பாண்டியா. என்ன தான் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் பேட்டர், பவுலர், பெஸ்ட் பீல்டர், சிறந்த பினிசர் என்ற அத்தனை பரிமாணங்களை உடைய அவருடைய இடம் காலியாகவே இருந்தது.

பின்னர் ஐபிஎல் தொடரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை ஏற்ற அவர், பக்குவமான கேப்டன்சி மட்டுமில்லாது, அழுத்தமான போட்டிகளில் கடைசி வரை நின்று அணிக்காக வெற்றியை தேடிக்கொடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதி போட்டி வரை எடுத்து சென்றார். புதுமையான அணி இறுதிப்போட்டியில் வெல்லாது என்று அத்தனை பேருக்கும் ஆச்சரியம் கொடுத்தது, ஹர்திக் தலைமையிலான அந்த இளம் அணி. ஐபிஎல் கோப்பையை அறிமுக தொடரிலேயே கைப்பற்றி அசத்தியது ஹர்திக் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி.

தொடர்ந்து இந்திய அணியில் அவருக்கான இடத்தை உருவாக்கி, மீண்டும் வந்து அங்கு அமர்ந்து கொண்டார் ஹர்திக் பாண்டியா. 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்காக அரைசதம் அடித்து நல்ல ஸ்கோரை அமைத்து கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. ஆனாலும் இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் மோசமான பவுலிங்கின் காரணமாக தோற்று வெளியேறியது. தொடர்ந்து பல மாற்றங்களை ஏற்படுத்திய பிசிசிஐ, ஹர்திக் பாண்டியாவின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை டி20 அணிக்கு கேப்டன் ஆக்கியது மட்டுமில்லாமல், நிரந்தர கேப்டனாக நியமிக்கும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.

ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஏன் ஸ்பெசல்!

ஹர்திக் பாண்டியா ஒரு மோட்டிவேசன் பிளேயர், 2022 டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட அழுத்தம் நிறைந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை விரைவாகவே இழந்து தோல்விதான் அடையப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா அந்த இடத்திற்கே செல்லாமல், அதிக சதங்களையும் பல போட்டிகளை ரன் சேஷிங்கில் வெற்றிகரமாக முடித்து கொடுத்த விராட் கோலி சொதப்பி கொண்டிருந்த போது வெற்றிக்கான மோட்டிவேசன் வார்த்தகளை உதிர்த்தார் ஹர்திக் பாண்டியா.

பின்னர் ஹர்திக் பாண்டியா ஒருபுறம் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிற்க, மறுபுறம் பட்டையை கிளப்பிய விராட் கோலி கைக்கு எட்டாத அந்த போட்டியை விரட்டி பிடித்து முடித்து கொடுத்தார் விராட் கோலி. அந்த போட்டியின் முடிவுக்கு பிறகு விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர்.

போட்டியின் வெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி, ”ஹர்திக் பாண்டியா என்னிடம் முக்கியமாக ஒரு வார்த்தை தான் சொன்னார். அது என்னவெனில், `நாம் இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தால் இந்த போட்டியை நம்மால் மாற்ற முடியும்’ என்பது!” என்றார்.

ஹர்திக் பாண்டியா ஒரு மோடிவேசன் பிளேயர் மட்டுமில்லாமல், அவர் அவர்களுக்கான ரோலை பகிர்ந்தளிக்கக்கூடிய கேப்டனாக ஐபிஎல் போட்டியில் திகழ்ந்தார். அதனால் தான் பெரிய அதிரடி வீரர்கள் இல்லாத குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தியா-நியூசிலாந்து டி20 தொடர்

நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் சூரியகுமார் யாதவின் அதிரடியான சதத்தால் 191 ரன்கள் குவித்த இந்திய அணி, 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அசத்தியது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நியூசிலாந்தின் மெக்லீன் பார்க், நேப்பியரில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது.

நியூசிலாந்தை ஒயிட்வாஸ் செய்யுமா இந்திய அணி

2019ஆம் ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்துக்கு சென்று பங்கேற்ற இந்திய அணி, முதல் முறையாக ஒரு எதிரணியை 5 போட்டிகளில் வென்று ஒயிட் வாஷ் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது ஹர்திக் தலைமையிலான இந்திய அணியும் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஸ் செய்யுமா என்று இன்றைய போட்டியில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com