ஹாட்ரிக் வெற்றி பெறுமா ராஜஸ்தான்? - டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு!

ஹாட்ரிக் வெற்றி பெறுமா ராஜஸ்தான்? - டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு!

ஹாட்ரிக் வெற்றி பெறுமா ராஜஸ்தான்? - டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு!
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

ராஜஸ்தான் 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் வலுவான நிலையில் உள்ளது. அதேவேளையில் பெங்களுரு அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

அசுர ஃபார்மில் இருக்கும் ராஜஸ்தானின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் அந்த அணிக்கு பெரும்பலம். சாஹல், அஸ்வின், டிரென்ட் பவுல்ட், பிரசித் பந்து வீச்சில் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். விராட் கோலி தொடர்ந்து 2 ஆட்டங்களில் ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார். அவர் நடப்பு தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது எனவே, அவர்கள் ரன்மழை பொழிந்தால் தான் எதிரணியை சமாளிக்க முடியும்.

முன்னதாக நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் பெங்களூருவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ராஜஸ்தான் அணி அதற்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். ஐதராபாத் உடனான ஆட்டத்தில் 68 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்த பெங்களூரு அதிலிருந்து மீள முயற்சிக்கும். எனவே இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்) , ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், டேரில் மிட்செல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com