பிரெஞ்சு ஓபன் வென்ற ரஃபேல் நடால், விம்பிள்டன் தொடரில் பங்கேற்க மாட்டாரா? என்ன காரணம்?

பிரெஞ்சு ஓபன் வென்ற ரஃபேல் நடால், விம்பிள்டன் தொடரில் பங்கேற்க மாட்டாரா? என்ன காரணம்?
பிரெஞ்சு ஓபன் வென்ற ரஃபேல் நடால், விம்பிள்டன் தொடரில் பங்கேற்க மாட்டாரா? என்ன காரணம்?

பிரெஞ்சு ஒபன் பட்டம் வென்ற ரஃபேல் நடால், காயம் காரணமாக விம்பிள்டன் தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பாரிசில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்சு ஒபன் இறுதிப் போட்டியில் பங்கேற்ற களிமண் தரை நாயகன் (King Of clay) என்று கொண்டாடப்படும் நடால், 14-வது முறையாக பிரெஞ்சு ஒபன் பட்டத்தை வென்றார்.

பாதத்தில் ஏற்பட்ட காயத்துடனேயே பிரெஞ்சு ஒபன் தொடரில் நடால் பங்கேற்ற நிலையில், புதிய சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதில் உரிய பலன் கிடைக்காத நிலையில், நடாலுக்கு பாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனால், அவர் வருகிற 27 ஆம் தேதி தொடங்கும் விம்பிள்டன் தொடரில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com