பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா! ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு

பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா! ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு

பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா! ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு
Published on

ஐபிஎல் 2022 சீசனில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்புத் தொடரில் இரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் பேட்டிங்கில் 200 ரன்களுக்கு மேல் குவித்தும், பவுலிங்கில் கொல்கத்தாவின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்து த்ரில் வெற்றியை ருசித்தது ராஜஸ்தான்.

கொல்கத்தா அணி மூன்று வெற்றிகளை மட்டும் பதிவுசெய்து தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் சென்னைக்கு நிகராக புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோவதுடன் 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வியடைந்த மோசமான சாதனையை மீண்டும் ஒருமுறை நிகழ்த்த வேண்டியிருக்கும்.

தொடர்ந்து சொதப்பிவரும் அந்த அணியின் ஓப்பனர்களான வெங்கடேஷ் ஐயர் - ஃபின்ஞ் எழுச்சி பெற்றால் மட்டுமே ஆரம்பத்திலிருந்து அந்த அணியின் ஸ்கோர் உயரும். பந்துவீச்சில் உமேஷ் யாதவ்வை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி சோபிக்காதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் வருண் சக்கரவர்த்தி பெரிய ஆட்டத்தில் திறனை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த தவறுவது அணிக்கு பலகீனமாக உள்ளது.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஜோஸ் பட்லர் விளையாடிய இரண்டு சதம் உட்பட 566 ரன்கள் விளாசி ஆரஞ்ச் கேப்பை தன்வசப்படுத்தியுள்ளார். ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டரும் பலமாக இருப்பதால் கொல்கத்தா பவுலர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. பந்துவீச்சில் சஹல், போல்ட், அஸ்வின், பிரஷித், குல்தீப் சன் என அசுரபலத்தில் இருக்கின்றனர். தனக்கான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்

கொல்கத்தா நைட் ராயல்ஸ்: ஆரோன் பின்ச், சுனில் நரைன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, சிவம் மாவி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com