பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா! டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு!

பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா! டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு!
பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா! டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு!

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பலம் வாய்ந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நவி மும்பையின் டிஒய் பாட்டில் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

அறிமுக அணியான லக்னோ இந்த சீசனில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்ட அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோல்வி கண்டாலும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. லக்னோ அணி தனது முந்தைய இரு லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்திருக்கிறது. எனவே வெற்றிப் பாதைக்கு திரும்பவும், பிளே ஆஃப் சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறவும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது அந்த அணிக்கு உதவிகரமாக இருக்கும்.

மறுபுறம், கொல்கத்தா அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 6ஆம் இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். கடைசியாக விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி, அதே உத்வேகத்தில் இந்த ஆட்டத்திலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் லக்னோ 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

லக்னோ அணியில் க்ருனால் பாண்டியா, சமீரா, ஆயுஷ் பதோனி ஆகிய மூவருக்கு பதிலாக மனன் வோஹ்ரா, லெவிஸ், கிருஷ்ணப்பா கவுதம் ஆகிய மூவர் களமிறங்க உள்ளனர். கொல்கத்தா அணியில் அஜிங்க்யா ரஹானே காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக அபிஜீத் தோமர் களமிறங்க உள்ளார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கே.எல். ராகுல், எவின் லூயிஸ், தீபக் ஹூடா, மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்ப கவுதம், மொஹ்சின் கான், அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், அபிஜீத் தோமர், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com