தொடரை வெல்லுமா இந்திய அணி? வெஸ்ட் இண்டீஸ் உடன் இன்று பலப்பரீட்சை
வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகள் மோதும் 121-வது ஒரு நாள் போட்டி இதுவாகும். வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் 105 ரன் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 93 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லுமா? அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்று இன்றைய போட்டியின் முடிவில் தெரியும்.