டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்? எகிறும் எதிர்பார்ப்புகள்!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்? எகிறும் எதிர்பார்ப்புகள்!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்? எகிறும் எதிர்பார்ப்புகள்!

டி20  உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒருமுறை மோதுவதை பார்ப்பதற்கு ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. ஏறக்குறைய வெளியேறும் நிலைமையில் சிக்கித்தவித்த பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து கொடுத்த வாழ்வு மூலமும், வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலமும் அரையிறுதி சுற்றுக்கு அசத்தலாக நுழைந்திருக்கிறது.

இதன்மூலம் குரூப்-1 பிரிவிலிருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும்,  குரூப்-2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி சுற்றில் இந்தியா -  பாகிஸ்தான் இடையே போட்டி இல்லையென்றாலும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. 

வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை பாகிஸ்தானும், வரும் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியாவும் எதிர்கொள்கிறது. அரையிறுதி சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளுமே வெற்றி பெறும் பட்சத்தில், இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதின. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 15 வருடங்கள் கழித்து இவ்விரு அணிகளும் சேர்ந்தாற்போல்  நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் மீண்டும் இறுதிப்போட்டியில் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே: அரையிறுதியில் பாகிஸ்தான்... சொமேட்டோ ட்வீட்டுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த பாக். நிறுவனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com