தொடரை வென்று வரலாறை மாற்றுமா இந்தியா? 2வது போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்!

தொடரை வென்று வரலாறை மாற்றுமா இந்தியா? 2வது போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்!
தொடரை வென்று வரலாறை மாற்றுமா இந்தியா? 2வது போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர் ஆகியோர் அபாரமாக பந்து வீசி 9 ரன்னுக்குள் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.மேலும் கே.எல். ராகுலின் பொறுப்பான அரைசதத்தாலும், சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தாலும் இந்திய அணி 17வது ஓவரிலேயே சிரமமின்றி இலக்கை எட்டி வெற்றியை ருசித்தது. கடந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி உற்சாகத்துடன் இந்திய அணி 2வது போட்டியில் களம் இறங்குகிறது.

சொந்த மண்ணில் இதுவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றதில்லை. இந்த வரலாற்றை மாற்றி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை கைப்பற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com