ஒருநாள் போட்டிகளில் சச்சினே சிறந்தவர், அது ஏன் ? - கவுதம் காம்பீர் விளக்கம் !

ஒருநாள் போட்டிகளில் சச்சினே சிறந்தவர், அது ஏன் ? - கவுதம் காம்பீர் விளக்கம் !
ஒருநாள் போட்டிகளில் சச்சினே சிறந்தவர், அது ஏன் ? - கவுதம் காம்பீர் விளக்கம் !

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை விராட் கோலியைவிட சச்சின் டெண்டுல்கரே சிறந்தவர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் கிரிக்கெட் கணெக்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுதம் காம்பீரிடம் கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது. அதில் ஒருநாள் அணியில் சச்சினைச் சேர்ப்பீர்களா அல்லது கோலியைச் சேர்ப்பீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்குச் சுவாரசியமான பதிலை விளக்கத்துடன் கூறியுள்ளார் கவுதம் காம்பீர. இப்போது சமூக ஊடகங்களில் சச்சினா? கோலியா? யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த காம்பீர "ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை நான் சச்சின் டெண்டுல்கரையே தேர்ந்தெடுப்பேன். அப்போதிருந்த ஒருநாள் போட்டிகளுக்கான பீல்டிங் விதிமுறைகள் இப்போதியிருப்பதைப் போல எளிமையானதாக இருக்கவில்லை எனவே சச்சின்தான் என்னுடைய விருப்பம். இது எனக்குக் கடினமான முடிவுதான் ஏனென்றால் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் விதிமுறைகள் மாறிவிட்டன. இப்போதுள்ள விதிமுறைகள் எளிமையானதாக பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக இருக்கிறது" என்றார்.

மேலும் தொடர்ந்த காம்பீர் "இன்றைய தலைமுறைக்கான ஒருநாள் போட்டியில் 2 புதிய பந்துகள், ரிவர்ஸ் ஸ்விங் இல்லை, சுழற்பந்தும் எடுபடவில்லை, 50 ஓவர்களுக்கும் வட்டத்தின் உள்ளே 5 பீல்டர்கள் தான். இதனால் பேட் செய்வது எளிதாக இருக்கிறது. சற்றே பின்னோக்கி பார்த்தால் சச்சின் விளையாட ஆரம்பித்தபோது வெற்றி பெறுவதற்கான இலக்கே 230, 240 ஆக இருந்திருக்கிறது. அதனால்தான் கோலியை விட சச்சினைத் தேர்ந்தெடுத்தேன்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com