"அது போன ஐபிஎல்...இப்போ" ஏலம் போகாத வீரர்கள் ! காரணம் என்ன ?

"அது போன ஐபிஎல்...இப்போ" ஏலம் போகாத வீரர்கள் ! காரணம் என்ன ?

"அது போன ஐபிஎல்...இப்போ" ஏலம் போகாத வீரர்கள் ! காரணம் என்ன ?
Published on

ஐபிஎல் போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலமும் அதே பரபரப்புடன் நடந்து முடிந்து இருக்கிறது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது.

இந்த ஏலத்தில் மொத்தம் 62 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் ரூ. 140.30 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பேட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ. 15.50 கோடிக்குத் தேர்வாகியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கிளென் மேக்ஸ்வெல் ரூ. 10.75 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குத் தேர்வானார்.

ஆனால் இதே ஏலத்தில் கடந்த காலத்தில் ஜொலித்த பல முக்கிய இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இந்த முக்கிய வீரர்களை அடிப்படை விலைக்கு கூட எந்த அணியும் வாங்கவில்லை. மிக முக்கியமாக இப்போது இந்திய டெஸ்ட் அணியில் இருக்கும் வீரர்களை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை. உதாரணத்துக்கு இந்திய டெஸ்ட் அணியின் தூணான புஜாராவை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல ஹனுமா விஹாரி, மனோஜ் திவாரியையும் எந்த அணியும் ஏலம் எடுக்காதது சோகமே. வெஸ்ட் இண்டீஸின் எவின் லீவிஸ், நியூசிலாந்தின் நட்சத்திர வீரரான கோலின் இன்கிராம், மார்டின் குப்டில் ஆகியோரையும் ஐபிஎல் அணிகள் கைவிட்டன. பவுலர்களில் டிம் சவுதி, இஷ் சோதி, ஆடம் ஜாம்பா, ஜாகிர் கான், அல்ஜாரி ஜோசப், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜேம்ஸ் பாட்டின்சன், லியாம் பிளங்கட், வினய் குமார் ஆகியோருக்கும் கல்தா கொடுத்தது ஐபிஎல் அணிகளின் நிர்வாகம்.

கடந்த காலத்தில் அணிகளுக்கு வெற்றிகளை தேடித் தந்த ஆல் ரவுண்டர்களான யூசப் பதான், கிராண்ட் ஹோம், ஸ்டுவர்ட் பின்னி, கோலின் முன்ரோ, ஜேசன் ஹோல்டர் ஆகியோரை எந்தவொரு அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இனி இவர்களின் எதிர்காலம் என்ன ? எதனடிப்படையில் அணிகள் தேர்வு செய்கின்றன ? என்பதை பார்க்கலாம்.

இது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஒருவர் கூறும்போது " உதாரணத்துக்கு இந்திய வீரர் புஜாரா டெஸ்ட் அணியில் விளையாடுபவர், அவருக்கு அதிரடியாக விளையாட தெரியாது, டி20 போட்டிகளுக்கு செட் ஆக மாட்டார் என ஐபிஎல் நிர்வாகங்கள் நினைக்கின்றன. அதேபோல கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்கள் இப்போது ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அணிகள் நிர்வாகம் இப்போது அவர்களின் ஆட்டத்திறனை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள், அதனால்தான் பல வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com