சி.எஸ்.கேவுக்காக இந்த சீஸனில் இம்ரான் தாஹிர் விளையாடாதது ஏன்?

சி.எஸ்.கேவுக்காக இந்த சீஸனில் இம்ரான் தாஹிர் விளையாடாதது ஏன்?

சி.எஸ்.கேவுக்காக இந்த சீஸனில் இம்ரான் தாஹிர் விளையாடாதது ஏன்?

கடந்த ஐபிஎல் சீசனில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவின் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர்.

துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். 

அண்மையில் நடந்து முடிந்த கரிபியன் பிரீமியர் லீக் தொடரிலும் 15 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியிருந்தார். இருப்பினும் சென்னையின் ஆடும் லெவனில் அவர் இடம் பிடிக்காமல் போனதற்கான காரணம் என்ன?

நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஒவ்வொரு அணியிலும் இடம்பெற வேண்டுமென்ற விதி தாஹிர் விளையாடாமல் இருப்பதற்கு முதல் காரணம். 

வாட்சன், டூப்லெஸி, பிராவோ மற்றும் சாம் கர்ரன் ஃபாரின் பிளேயர் கோட்டாவை நிரப்பியுள்ளனர். 

அதே நேரத்தில் சென்னை பவுலிங்கிலும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக உள்ளது. சுழற் பந்து வீச்சில் பியூஷ் சாவ்லா சொதப்பினாலும் அவருக்கு மாற்றாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய கரண் ஷர்மா அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் இந்த முடிவுகளை எல்லாம் கடந்து சென்னை வெளிநாட்டு சுழற் பந்து வீச்சாளரை களம் இறக்க விரும்பினால் அது சாண்ட்னராக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. தாஹிரை காட்டிலும் சாண்ட்னர் பேட்டிங்கிலும் கைகொடுப்பார்.

55 ஐபிஎல் ஆட்டங்களில் 79 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com