கோல்டன் பூட் விருதை பெறப்போவது யார்?.. முன்னிலையில் எம்பாப்வே.. மெஸ்ஸி, ரொனால்டோ நிலை?

கோல்டன் பூட் விருதை பெறப்போவது யார்?.. முன்னிலையில் எம்பாப்வே.. மெஸ்ஸி, ரொனால்டோ நிலை?
கோல்டன் பூட் விருதை பெறப்போவது யார்?.. முன்னிலையில் எம்பாப்வே.. மெஸ்ஸி, ரொனால்டோ நிலை?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் விருதை பெறும் வாய்ப்பு பிரான்ஸ் வீரர் எம்பாஃபே-வுக்கு அதிகம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

தனது தாய் நாட்டுக்காக உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட வேண்டும் என்பதே உலகில் உள்ள ஒவ்வொரு கால்பந்து வீரரின் கனவாகும். அந்த குறிக்கோளை அடைந்த பின்பு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக கோல் அடித்து கோல்டன் பூட் விருதை வென்று சாதனை படைக்க வேண்டும் என்பதும் இலக்காக இருக்கும்.

இந்நிலையில் கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்து கோல்டன் பூட் விருதை பெறும் வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது. யார் யார் கோல்டன் பூட் விருதை பெறும் போட்டியில் உள்ளனர் என்பதை வரிவாக பார்க்கலாம்...

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடும் வீரர்களில் யார் அதிக கோல் அடிக்கிறார்களோ அந்த வீரருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் கோல் பூட் விருதை வழங்கி சிறப்பு செய்கிறது. தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்த விருதை பெறும் முனைப்பில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாஃபே 5 கோல்கள் அடித்து முதலிடத்திலும், 3 கோல்கள் அடித்துள்ள அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக பிரேசில் வீரர் ரிச்சர்லிசன், பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஜிரோட், இங்கிலாந்து வீரர்கள் புகாயோ சகா, மார்கஸ் ராஷ்ஃபோர்ட், நெதர்லாந்து வீரர் கோடி காக்போ, ஸ்பெயின் வீரர் ஆல்வாரோ மொராட்டோ, ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில், காலிறுதி, அரையிறுதி, மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட வீரர்களில் யார் கோல்டன் பூட் விருதை பெறுவார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க முடியும், ஆனால், தற்போது வரை 5 கோல்களை அடித்துள்ள பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே கோல்டன் பூட் விருதை பெறும் வாய்ப்பு அதிகம் என ரசிகர்களின் டாக்காக இருக்கிறது.

இந்நிலையில் இனிமேல் நடைபெறும் போட்டிகளின் முடிவை பொருத்தே கோல்டன் பூட் போட்டி நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும் என நம்பலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com