SRH அணியில் புவனேஷ்வர் குமாருக்கு மாற்றாக இடம்பிடிக்க உள்ள வீரர் யார்?

SRH அணியில் புவனேஷ்வர் குமாருக்கு மாற்றாக இடம்பிடிக்க உள்ள வீரர் யார்?

SRH அணியில் புவனேஷ்வர் குமாருக்கு மாற்றாக இடம்பிடிக்க உள்ள வீரர் யார்?
Published on

நடப்பு ஐபிஎல் சீஸனிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விலகியுள்ளார்.சென்னை அணியுடனான லீக் ஆட்டத்தில் 19வது ஓவரை வீசிய போது காயம்பட்டதால் இந்த தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் புவனேஷ்வர் குமார் விளையாடமாட்டார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு மாற்றாக ஆரஞ்சு ஆர்மியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட உள்ள இந்திய வீரர் யார் என்பதை அலசுவோம். 

பவுலிங் யூனிட்டில் படு ஸ்ட்ராங்காக உள்ள ஹைதராபாத் அணி புவனேஷ்வர் குமாருக்கு மாற்றாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை சைன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூசுப் பதான் 

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் யூசுப் பதானை சன்ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. 2018 மற்றும் 2019 சீஸனில் ஹைதராபாத் அணிக்காக பதான் விளையாடி இருந்தார். 

தேவையுள்ள நேரங்களில் ஆப் ஸ்பின் வீசியும் பதான் அசத்துவார். 2020 ஐபிஎல் ஏலத்தில் பதான் அன்சோல்ட் பிளேயராக உள்ளார். 

கொஞ்சம் வீக்காக உள்ள மிடில் ஆர்டரில் பதான் தன் அனுபவத்தின் மூலம் வலு சேர்க்கலாம். 

ரோகன் கடம்

கர்நாடகாவை சேர்ந்த இளம் இடது கை பேட்ஸ்மேன் ரோகனை சன்ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்யலாம். 20 டி20 போட்டிகளில் விளையாடி 794 ரன்களை சேர்த்துள்ளார் ரோகன். கர்நாடக பிரிமியர் லீக் தொடரில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக ரோகன் விளையாடி  வருகிறார். 

வினய் குமார்

புவனேஷ்வருக்கு மாற்றாக பவுலரையே மீண்டும் அணியில் சேர்க்க ஹைதராபாத் சேர்க்க விரும்பினால் ரைட் ஆர்ம் மீடியம் பேஸரான வினய் குமாரை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. 

ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு, கொச்சி, கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்காக அவர் விளையாடியுள்ளார். மேலும் கடந்த ரஞ்சி சீசனில் புதுச்சேரி அணிக்காக இரண்டு முறை ஆறு விக்கெட்டுகளுக்கு மேல் அவர் வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com