தினேஷ் கார்த்திக்கா..பாண்ட்டா? யார் விக்கெட் கீப்பர்.. முடிவுக்கு வந்தது குழப்பம்!

தினேஷ் கார்த்திக்கா..பாண்ட்டா? யார் விக்கெட் கீப்பர்.. முடிவுக்கு வந்தது குழப்பம்!
தினேஷ் கார்த்திக்கா..பாண்ட்டா? யார் விக்கெட் கீப்பர்.. முடிவுக்கு வந்தது குழப்பம்!

ஆசிய கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கை புறக்கணித்துவிட்டு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார் சபா கரீம்.  

ஆசிய கோப்பை தொடர் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடருக்காக அமீரகம் சென்றடைந்துள்ள அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா தலைமையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் பலமான பேட்டிங் படையுடன் சென்றுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியாக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரை விக்கெட் கீப்பராக நியமிப்பது என்ற பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. ஆனால்  விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தான் நியமிக்க வேண்டும் எனத் தடாலடியாக தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினருமான சபா கரீம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரைத்தான் விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய முடியும். இதில் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக நியமிப்பது நல்லது. தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்தால் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து 5 பவுலர்களுடன் இந்திய அணி ஆட நேரிடும். அது சரியாக வராது. 5 பவுலர்களுடன் ஹர்திக் பாண்டியா 6வது பவுலிங் ஆப்சனாக இருப்பதுதான் அணியின் பேலன்ஸை வலுப்படுத்தும். எனவே  தினேஷ் கார்த்திக்கை எடுக்கவில்லை'' என சபா கரீம் கூறியுள்ளார்.   

சமீப காலமாகவே இந்திய அணியின் டி20 போட்டிகளில் ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். அவர் மீது நம்பிக்கை வைத்ததில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார். தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட அவர், சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் 19 பந்துகளில் 41 ரன்களை குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'தோனியுடன் இருந்ததுதான்....' விராட் கோலியின் எமோஷனல் பதிவு - உருகிய ரசிகர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com