புனே கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகள பராமரிப்பாளர் பாண்டுரங் சல்கான்கர் திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெளிநபரின் தேவைக்கு ஏற்ப ஆடுகள தன்மையை மாற்றி அமைக்க சல்கான்கர் முன்வந்ததாக தனியார் தொலைக்காட்சி செய்த ஸ்டிங் ஆபரேஷனில் தெரிய வந்தது. இதையடுத்து புனே ஆடுகள பராமரிப்பாளரை இடைநீக்கம் செய்து கிரிக்கெட் கட்டுப்பாடடு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்க சில மணி நேரத்திற்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து முழுமையான விசாரணை நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

