பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!

பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!

பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
Published on

ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கும் 64-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் தலா 6 வெற்றி, தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5ஆம் இடத்தில் உள்ளது.

முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றி பெற்ற உத்வேகத்துடன் டெல்லி இன்று களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெறும் பட்சத்தில் 14 புள்ளிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் பெங்களூர் அணியை முந்தி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறும். எனவே பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கும் முனைப்பில் டெல்லி அணி இன்று கவனமாக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், பஞ்சாப் அணியும் இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் தலா 6 வெற்றி, தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் 7-ஆம் இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். பெங்களூரு அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 209 ரன்கள் குவித்து 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது பஞ்சாப். அந்த உத்வேகத்துடன் அந்த அணி இன்றும் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கெனவே மோதிய ஆட்டத்தில் டெல்லி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால், ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், சர்ஃபராஸ் கான், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com