சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ள ஐபிஎல் போட்டியைப் பார்ப்பதற்காக, தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் புனேவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று காலை புறப்பட்டனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மன்றம் சார்பில் சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ரயில் மூலம் புனேவுக்கு ரசிகர்கள் செல்கின்றனர்.இந்த ரயில் நாளை காலை 5.30 மணிக்கு புனே சென்றடையும்.
காவிரிப் போராட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள், புனேவுக்கு மாற்றப் பட்டன. போட்டி வேறுமாநிலத்திற்கு மாற்றப்பட்டபோதிலும், வீரர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க ரசிகர்கள் புனே செல்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் புனேவில் நாளை விளையாடவுள்ளது.