\
இன்று பலப்பரீட்சை நடத்தும் அணிகள் எவை? உருகுவே அணியை வெல்லுமா போர்ச்சுகல்?

இன்று பலப்பரீட்சை நடத்தும் அணிகள் எவை? உருகுவே அணியை வெல்லுமா போர்ச்சுகல்?

இன்று பலப்பரீட்சை நடத்தும் அணிகள் எவை? உருகுவே அணியை வெல்லுமா போர்ச்சுகல்?
Published on: 

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது. பிரேசில் அணியுடன் சுவிட்சர்லாந்து பலப்பரீட்சை நடத்துகிறது.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து லீக் சுற்றில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது. மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள கேமரூன் செர்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மாலை 6.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் எச் பிரிவில் இடம்பெற்றுள்ள தென் கொரியா, கானா அணியை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில், சுவிட்சர்லாந்து அணியை சந்திக்க உள்ளது.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் எச் பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் அணியை உருகுவே அணி எதிர்கொள்கிறது. இந்த நான்கு போட்டிகளையும் ரசிகர்கள் நம்பி பார்க்கலாம். பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com