ரிக்கி பாண்டிங், தோனி சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங்!

ரிக்கி பாண்டிங், தோனி சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங்!
ரிக்கி பாண்டிங், தோனி சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங்!

மகளிர் டி20 உலகக் கோப்பையை 6வது முறையாக கைப்பற்றி, அதிக ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய கேப்டன்களில் ரிக்கி பாண்டிங், எம்.எஸ்.தோனி சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார் ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங். 

மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்காவும் நேற்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் சேர்த்தது. 

157 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியை ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. ஆனாலும் இலக்கை விரட்ட கடுமையாக முயற்சித்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங்கின் கேப்டன்சியில் அந்த அணி ஹாட்ரிக் டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. மெக் லானிங் 5வது ஐசிசி கோப்பையை  ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு மொத்தமாக 4 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்த ரிக்கி பாண்டிங் மற்றும் இந்திய அணிக்கு 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனியின் சாதனைகளை முறியடித்துள்ளார். அதிக ஐசிசி டிராபியை வென்ற கேப்டன் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார் மெக் லானிங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com