அதிக பணத்தால்ஓய்வு எடுக்க நினைக்கிறீர்கள் - பாண்டியாவை சாடிய பாக். முன்னாள் வீரர் ரசாக்

அதிக பணத்தால்ஓய்வு எடுக்க நினைக்கிறீர்கள் - பாண்டியாவை சாடிய பாக். முன்னாள் வீரர் ரசாக்

அதிக பணத்தால்ஓய்வு எடுக்க நினைக்கிறீர்கள் - பாண்டியாவை சாடிய பாக். முன்னாள் வீரர் ரசாக்
Published on

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உடலவிலும் மனதளவிலும் கிரிகெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர் “ இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு கிரிக்கெட்டிற்கு தேவையான அனைத்து திறமைகளும் உள்ளன. ஆனால் அவர் கடினமாக உழைக்க மறுக்கிறார். அவர் உடலளவிலும், மனதளவிலும் கிரிக்கெட்டின் மீது தனது கவனத்தை திருப்ப வேண்டும். பாண்டியா ஒரு நல்ல கிரிக்கெட் வீரர், ஆனால் அவரால் ஆல்ரவுண்டராக ஜொலிக்க முடியும். அதற்கு கடின உழைப்பு தேவை. நீங்கள் கிரிக்கெட்டிற்கு போதுமான நேரம் கொடுக்காத போது கிரிக்கெட் உங்களை விலகிச் செல்கிறது. உங்களிடம் நிறைய பணம் இருக்கும் போது நீங்கள் ஓய்வு எடுக்க விரும்புகிறீர்கள் என்று பேசினார்.

மேலும் இம்ரான் கான் மற்றும் கபில் தேவ் ஆகியோர் எல்லா காலக்கட்டத்திலும் ஆல்ரவுண்டராக இருந்தார்கள் என்றும் ஹர்திக் தற்போதுதான் லீக்கிற்கு அருகில் வந்திருக்கிறார் என்றும் அவர் பேசினார்.

கடந்த வருடம் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுடனான ஒரு நாள் போட்டியில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com