ருதுராஜ் அவுட்டான போது 'நான் போகிறேன்' என கண்ணால் சொன்னார் தோனி - ஸ்டீபன் ஃப்ளெமிங்

ருதுராஜ் அவுட்டான போது 'நான் போகிறேன்' என கண்ணால் சொன்னார் தோனி - ஸ்டீபன் ஃப்ளெமிங்
ருதுராஜ் அவுட்டான போது 'நான் போகிறேன்' என கண்ணால் சொன்னார் தோனி - ஸ்டீபன் ஃப்ளெமிங்
ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்ததும் யாரை களமிறக்குவது என விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில், 'நான் போகிறேன்' என்று தோனி தன்னிடம் கண்களால் பேசியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறினார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ப்ளே-ஆப் ஆட்டத்தில் மிரட்டலான பேட்டிங் மூலம் வெற்றி பெறச் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பாராட்டு வெள்ளத்தில் நனைந்து வருகிறார். சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.
சென்னை அணி வெற்றிபெற, 11 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தோனி களமிறங்கினார். அந்த இடத்தில் ஆல்-ரவுண்டர் ஆன ரவீந்திர ஜடேஜா களமிறங்குவதுதான் வழக்கம். சமீபத்திய போட்டிகளில் ரன் குவிக்கத் தடுமாறிவந்த தோனி, பேட்டிங் வரிசையை மாற்றி திடீரென களமிறங்கியது பலருக்கும் ஆச்சரியமளித்தது. ஆனால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதன் மூலம் முந்தைய போட்டிகளில் அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் தனது பேட்டின் மூலம் பதிலளித்து விட்டார்.
முன்னதாக, 19-வது ஓவரின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்து நெருக்கடி ஏற்பட்டிருந்த சூழலில், யாரை களமிறக்குவது என விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில், 'நான் போகிறேன்' என்று தோனி தன்னிடம் கண்களால் பேசியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறினார். போட்டிக்கு முன்பாக தோனி நெட் பயிற்சியின் போது அதிரடியாக ஆடினார் என்றும் அதனால் ஜடேஜாவுக்கு பதிலாக அவர் இறங்கியதை தடுக்கவில்லை எனவும் அதன் நல்ல முடிவை பிறகு நாங்கள் பார்த்தோம் என்றும் பிளெமிங் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com