விளையாட்டு
"கிண்டல் செய்த பீட்டர்சனை கலாய்த்த தோனி" - உத்தப்பா பகிர்ந்த நினைவலைகள்
"கிண்டல் செய்த பீட்டர்சனை கலாய்த்த தோனி" - உத்தப்பா பகிர்ந்த நினைவலைகள்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலாய்த்தது குறித்த நினைவுகளை சிஎஸ்கே பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா வேடிக்கையாக பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து யுடியூபில் பேசிய ராபின் உத்தப்பா "வர்ணனையாளராக இருந்த பீட்டர்சன், தோனியை கிண்டல் செய்யும்விதமாக பேசினார். அதற்கு தோனி அவரிடம் 'நான் உன்னுடைய விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன், அதனால் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும்' என பதிலுக்க கலாய்த்தார்" என்றார்.
மேலும் பேசிய உத்தப்பா "தோனியின் கைகள் ஸ்டம்பிங்கில் மட்டுமே வேகமாக இயங்கும் என்றால் அது பொய். அவர் எதிராளியை கிண்டலடிப்பதில் அதைவிட வேகமாக செயல்படுவார்" என்றார் அவர்.