இந்தியா-நியூசி. கடைசி டி20 போட்டி: சிராஜுக்கு பதில் குல்தீப் !

இந்தியா-நியூசி. கடைசி டி20 போட்டி: சிராஜுக்கு பதில் குல்தீப் !
இந்தியா-நியூசி. கடைசி டி20 போட்டி: சிராஜுக்கு பதில் குல்தீப் !

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று சமநிலையில் உள்ளன. இரண்டாவது போட்டியில் சிறப்பான வெற்றியை ஈட்டிய உற்சாகத்துடன் நியூசிலாந்து அணி உள்ளது. மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முதன்முறையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்திய அணியில், வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்க்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக சர்வதேச போட்டியை நடத்தும் திருவனந்தபுரத்தில் எந்த அணி வெற்றியை ஈட்டித் தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியுள்ளது.
திருவனந்த புரத்தில் மழை பெய்துவருவதால் போட்டி பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com