யூரோ கோப்பை கால்பந்து: எதிர்பார்க்கப்பட்ட பிரதான 3 அணிகள் வெளியேற காரணம் என்ன? - அலசல்

யூரோ கோப்பை கால்பந்து: எதிர்பார்க்கப்பட்ட பிரதான 3 அணிகள் வெளியேற காரணம் என்ன? - அலசல்
யூரோ கோப்பை கால்பந்து: எதிர்பார்க்கப்பட்ட பிரதான 3 அணிகள் வெளியேற காரணம் என்ன? - அலசல்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிவரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படட போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகள் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்ட யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் அனல் பறக்கும் அதிரடி ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. இந்த 24 அணிகளை ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் வீதம் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த லீக் சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற 2 அணிகள் வீதம் 12 அணிகள். அவை, A பிரிவில் இருந்து இத்தாலி, வேல்ஸ் அணிகளும். B பிரிவில் இருந்து பெல்ஜியல், டென்மார்க் அணிகளும். C பிரிவில் இருந்து நெதர்லாந்து, ஆஸ்டிரியா அணிகளும், D பிரிவில் இருந்து இங்கிலாந்து, குரோசியா அணிகளும். E பிரிவில் இருந்து ஸ்வீடன், ஸ்பெயின் அணிகளும், F பிரிவில் இருந்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகளும் (pre quater final) காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளுக்குள் நுழைந்துள்ளன.

அதேபோல லீக் சுற்றுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நான்கு அணிகளும் அவை, A பிரிவில் இருந்து சுவிட்சர்லாந்து அணியும், C பிரிவில் இருந்து உக்ரைன் அணியும், D பிரிவில் இருந்து செக் குடியரசு அணியும் F பிரிவில் இருந்து போர்ச்சுகல் அணியும் அடுத்த சுற்றுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளன. இதையடுத்து 12 + 4 என மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றன.

இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என உலக கால்பந்து ரசிகர்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல், பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்று போட்டிகளிலேயே தோல்வியுற்று கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேற்கூறிய இந்த மூன்று அணிகளும் தன்னைவிட பலம் குறைந்த அணியுடன் விளையாடுவதாக எண்ணி மிகவும் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என்று சொல்லலாம். பிரிவு எப்ல் இடம்பெற்றிருந்த ஹங்கேரி, பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல் ஆகிய நான்கு அணியும் வெற்றி வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

போர்ச்சுகல்

போர்ச்சுகல் அணி தனது முதல் லீக் போட்டியில் ஹங்கேரி அணியை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஜெர்மனி அணியுடனான இரண்டாவது போட்டியில் 4:2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. தனது கடைசி லீக் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொண்ட போர்ச்சுகல் அணி 2:2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதன் மூலம் F பிரிவில் இடம் பெற்றிருந்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த பிரிவில் மூன்றாம் இடத்தில் இருந்த போர்ச்சுகல் அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது

கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி முதல் தொடர்ந்து ஒருமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவையே நம்பியிருந்தது. இதுவும் இந்த அணி தோல்வியை தழுவி போட்டியில் இருந்து வெளியே காரணமாகவும் அமைந்தது. கடந்த முறை நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற போர்ச்சுகல் இந்த முறை காலிறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெறவில்லை இது ரசிகர்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜெர்மனி

ஜெர்மனி அணியை பொருத்தவரை இளம் விளையாட்டு வீரர்களும் சீனியர் விளையாட்டு வீரர்களையும் கொண்ட ஒரு சிறந்த அணியாகவே இருந்தது. ஆனால் எதிர் அணி வீரர்களை துச்சமாக மதித்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த அணியின் வீரர்கள், நாம் எதிர்த்து விளையாட இதெல்லாம் ஒரு அணியா என எதிர் அணியை எடைபோட்டது போலவே இருந்தது இவர்களது ஆட்டம். அனைத்து வீரர்களும் ஒன்றிணைந்து ஆடினாலும் எதிர் அணி வீரர்களை எதிர்த்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டது என்றே சொல்லலாம்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட ஜெர்மனி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இங்கிலாந்து அணிக்கு ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது. அந்த வீரர்களிடம் பால் கண்ட்ரோல், ஸ்பீடு எல்லாம் நன்றாக இருந்தது. இங்கிலாந்து அணியின் தாக்குதல் ஆட்டத்தை ஜெர்மனி அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இங்கிலாந்து ஜெர்மனி போட்டியை, இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றே சொல்வார்கள். 1966ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி ஜெர்மனி அணியை வென்றிருக்கிறது. அதன்பிறகு இப்போதுதான் ஜெர்மனியை இங்கிலாந்து வென்றுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியை காண வந்திருந்த இங்கிலாந்து இளவரசி வீரர்களுக்கு உற்சாகமூட்டியதை பார்க்க முடிந்தது. இந்த அணியின் ஸ்டெர்லிங் மிகவும் சிறப்பாக விளையாண்டார். அதேபோல சீனியர் விளையாட்டு வீரர் ஹரிகேன் அருமையான ஒரு கோல் அடித்தார். ஜெர்மனி அணியின் முன்கள ஆட்டக்காரர் முல்லார் சிறப்பாக விளையாண்டார் ஆனால் அவருக்கு கிடைத்த கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு ரசிகர்களை ஏமாற்றினார். ஜெர்மனி அணி கோல் வாங்கிய பிறகும் தடுப்பு ஆட்டத்தையே தொடர்ந்தார்களே தவிர தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுக்க வில்லை. அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ள இங்கிலாந்து அணி இந்த போட்டியில் மிகவும் எளிதாக ஜெர்மனி வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

பிரான்ஸ்

பூக்பா, கிரீஸ்மென் போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்களைக் கொண்ட பிரான்ஸ் அணி சுவிட்சர்லாந்து அணியிடம் தோற்றது அதிசயமாக பார்க்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து 1938-ல் நடந்த இண்டர்நேஷனல் போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் 1954-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியை நடத்திய நாடு என்ற முறையில் அப்போது கூட சுவிட்சர்லாந்து அணிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் 65 வருடம் கழித்து இந்த போட்டியில் வெற்றிபெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது அதிசயம்தான்.

பிரான்ஸ் அணியின் கோல்கீப்பர் சாமர் வாங்கிய ஒரு சாதாரண கோல்தான் பிரான்ஸின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது என்கின்றனர் கால்பந்து வல்லுனர்கள். இது போன்ற ஒரு சில்லி கோலை நான் விட்டதில்லை எனறே சாமர் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். 65 இண்டர்நேஷனல் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்றுத்தந்த சாமர் செய்த சிறு தவறு அந்த அணி போட்டியை விட்டே வெளியேற்றி இருக்கிறது.

இதையடுத்து மூன்று கோல்கள் அடித்து பிரான்ஸ் முன்னிலை பெற்றிந்தது. போட்டியின் கடைசி 5 நிமிடம் இருக்கும்போது தேவையில்லாமல் கிரீஸ்மென் வெளியே அழைக்கப்பட்டார். இதை பயன்படுத்திய சுவிட்சர்லாந்து அணி மேலும் இரண்டு கோல்கள் அடித்து 3:3 என்ற கோல்கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தது. இரண்டு கோல் முன்னிலையில் இருந்து பிரான்ஸ் அணி கால்பந்து விளையாட்டில் கடைசி நிமிடத்தில் அதிசயம் நடக்கும் என்பதற்கு உதாரணமாக இரண்டு கோல்களை வாங்கி போட்டி சமனில் முடிந்தது. இறுதியாக டை பிரேக்கர் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 5 கோல்களும், பிரான்ஸ் அணி 4 கோல்களும் அடித்தது. 8:7 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்ற சுவிட்சர்லாந்து அணி காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com