களத்தில் திடீரென காணாமல் போன பேட்ஸ்மேன்: சிஎஸ்கே - ஆர்.சி.பி போட்டியில் நடந்தது என்ன?

களத்தில் திடீரென காணாமல் போன பேட்ஸ்மேன்: சிஎஸ்கே - ஆர்.சி.பி போட்டியில் நடந்தது என்ன?
களத்தில் திடீரென காணாமல் போன பேட்ஸ்மேன்: சிஎஸ்கே - ஆர்.சி.பி போட்டியில் நடந்தது என்ன?

துபாயில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 44வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. 

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு ராயுடு மறுமுனையில் கம்பெனி கொடுத்தார். 

இருவரும் இன்னிங்க்ஸை ராக் செய்தனர். 

இந்நிலையில் 2.30 நிமிடங்கள் டைம் அவுட் அறிவிக்கப்பட்டது. அது முடிந்தவுடன் வீரர்கள் எல்லோரும் அவரவர் பொசிஷனுக்கு திரும்பினர். இருப்பினும் ஆட்டம் ஆரம்பிக்கப்படாமல் மேலும் இரண்டு நிமிடங்கள் தாமதமானது. 

“களத்திற்கு ஒரு பேட்ஸ்மேன் திரும்பாததால் ஆட்டம்  தாமதமாகியுள்ளது. ராயுடு களத்திலிருந்து வெளியேறி பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார்” என வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். 

வயிற்று உபாதையினால் ராயுடு பிரேக் எடுத்து கொண்டது தெரிந்தது. அவர் களத்திற்கு திரும்பும் போது சோர்வுடன் காணப்பட்டார். PAD கட்டும் போது ஆர்சிபி விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸுடன் சிரித்தபடி பேசிக்கொண்டே இருந்தார். 

அதன் பின்னர் மூன்று பந்துகளை சந்தித்த நிலையில் அவுட்டானார் ராயுடு. 

கடந்த சில போட்டிகளாக ரன் சேர்க்க தவறிய ராயுடு இந்த போட்டியில் ரன் சேர்த்தது சென்னையின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com