\
தோனி ஒரு நாள் பிரதமரானால் ! விக்னேஷ் சிவனின் ஆசை

தோனி ஒரு நாள் பிரதமரானால் ! விக்னேஷ் சிவனின் ஆசை

தோனி ஒரு நாள் பிரதமரானால் ! விக்னேஷ் சிவனின் ஆசை
Published on: 

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது. இதனையடுத்து பல்வேறு திரைப் பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட இயக்குநரான விக்னேஷ் சிவன், இன்னும் ஒருபடி மேலே சென்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அதில் "தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்... மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் மீது ஒரு புகார் கூட இல்லாத அப்பழுக்கற்றவர். அவர்
இன்னும் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல, நாட்டுக்காகவும்” என சிலாகித்துள்ளார் விக்னேஷ் சிவன். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com