‘உங்களுக்கு ஏன் இவ்வளவு ஓய்வு’- ட்ராவிட்டை விமர்சித்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி!

‘உங்களுக்கு ஏன் இவ்வளவு ஓய்வு’- ட்ராவிட்டை விமர்சித்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி!
‘உங்களுக்கு ஏன் இவ்வளவு ஓய்வு’- ட்ராவிட்டை விமர்சித்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி!

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டை, முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியடைந்த நிலையில், தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி நாளை தொடங்கி நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் துவங்கி, 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த இரு தொடர்களிலும் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இடம்பெறவில்லை. பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோரும் அணியில் இல்லை. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தற்காலிகமாக தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் அடிக்கடி ஓய்வு எடுப்பது குறித்து, முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் நேரலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது, “ஓய்வுகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் நான் எனது அணியையும், வீரர்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பவன். அப்போதுதான் அணியில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க முடியும். பயிற்சியாளர்களுக்கு ஏன் இந்த ஓய்வு அளிக்கப்படுகிறது. உண்மையில் அளவுக்கதிமான ஓய்வுக்கான தேவைதான் என்ன?

ஐபிஎல் தொடரின்போது 2 முதல் 3 மாத காலம் பயிற்சியாளர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறது. அந்தக் காலம் ஓய்வுக்கு போதும் என நினைக்கிறேன். மற்ற நேரங்களில் பயிற்சியாளர், வீரர்களுடன் இருந்து அவர்களை கவனிக்க வேண்டும். அந்தப் பொறுப்பில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கு பின் மட்டும் அல்ல, இதற்கு முன்னதாக இந்த ஆண்டில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து நாட்டில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும் ராகுல் ட்ராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, விவிஎஸ் லக்ஷ்மண் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். ஆனால் அதேநேரத்தில் தலைமை பயிற்சியாளர்க இருந்த காலத்தில் ரவிசாஸ்திரி பெரிதாக ஓய்வு எடுக்காமல் இருந்ததால் தற்போது ராகுல் ட்ராவிட்டை அவர் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com