பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? - 'கால்குலேட்டர்' சொல்லும் கணக்கு

பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? - 'கால்குலேட்டர்' சொல்லும் கணக்கு
பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? - 'கால்குலேட்டர்' சொல்லும் கணக்கு

ப்ளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறுவதற்கு கால்குலேட்டர் சொல்லும் கணக்குகள் என்ன?

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி பெரும் 4-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த தொடரில் லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனால் சிஎஸ்கே அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறி தான். இருப்பினும் பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை செல்ல இன்னும் சில வழிகளும் உள்ளன.  

சென்னை அணி தங்களுக்கு எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெறுவது மட்டும் அந்த அணியின் ப்ளே-ஆஃப் கனவிற்கு பலனளிக்காது. பின்வரும் மற்ற அணிகள் இடையேயான போட்டிகளின் முடிவும் சென்னை அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். அவ்வாறு நடந்தால்  சென்னை அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி போட்டிகளின் முடிவுகள் அமைந்தால் 3-வது மற்றும் 4-வது இடத்தில் ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப் மற்றும்  சென்னை ஆகிய அணிகள் 14 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருக்கும். அந்த சூழலில் சென்னை அணியின் ரன் ரேட் உயரிய நிலையில் இருந்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற முடியும்.  

இதையும் படிக்கலாம்: ஸ்பின்னர்களால் வென்ற சென்னையும்; ஸ்பின்னர்களாலே கவிழ்ந்த டெல்லியும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com