டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்! வெற்றியுடன் ஒருநாள் தொடரை துவங்குமா இந்திய அணி?

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்! வெற்றியுடன் ஒருநாள் தொடரை துவங்குமா இந்திய அணி?
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்! வெற்றியுடன் ஒருநாள் தொடரை துவங்குமா இந்திய அணி?

இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, அடுத்ததாக மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்று விளையாட உள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் கேப்டன் ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிக்கோலஸ் பூரன் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஹோல்டர், மேயர்ஸ், ரோவ்மன் பவுல், அல்சாரி ஜோசப் போன்ற வீரர்கள் பார்மில் உள்ளனர். இவர்கள் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு ட்ரினிடாட் நகரத்தில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

வழக்கமாக இந்திய அணியின் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அல்லது சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை டிடி ஸ்போர்ட்ஸ் வாங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தூர்தர்ஷனில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

இந்திய அணி: ஷிகர் தவான்(கேப்டன்), சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், யஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

மேற்கிந்திய தீவுகள் அணி: ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), பிராண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மேன் பவல், அகேல் ஹொசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com